உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் நேங (03) நள்ளிரவுடன் நிறைவடையுமென என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று நள்ளிரவுக்குப் பிறகு தேர்தல் நாள் வரை எந்தவொரு பிரச்சார நடவடிக்கையும் தேர்தல் சட்டத்திற்கு அமைய தடைசெய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தேர்தல் தொடர்பான 4150 முறைப்பாடுகள் இதுவரை தேர்தல் ஆணைக்குழுவில் பதிவாகியுள்ளன.
அவற்றில் 3,495 முறைப்பாடுகள் இதுவரை தீர்க்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 655 முறைப்பாடுகளை தீர்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.