உழைக்கும் மக்கள் வியர்வை சிந்தி, தங்கள் உயிரைத் தியாகம் செய்த வேதனையான வரலாற்றை முடிவுக்குக் கொண்டு வந்து, வெற்றிகரமானதொரு ஆண்டில் மக்களால் அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் கீழ் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மே தின அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்த அவர், பல ஆண்டுகளாக நாட்டைப் பாதித்து வரும் ஊழலையும் அநீதியையும் ஒரே இரவில் மாற்ற முடியாது என்ற போதிலும் அரசாங்கம் படிப்படியாக அனைத்து விடயங்களையும் ஒழுங்குபடுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வென்றெடுத்த உரிமைகளைப் பாதுகாத்து, நாட்டைக் கட்டியெழுப்ப உறுதியுடன் ஒன்றிணைந்து அனைவரும் உழைப்போம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.