இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம்.
பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்தவகையில் 2025ஆம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை இந்திய மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி அறிவித்திருந்தது.
இதில் நடிகர் அஜித்குமாருக்கும் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் 28.04.2025 மாலை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் நடிகர் அஜித்குமாருக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவினால் பத்மபூஷன் விருது வழங்கப்படவுள்ளது.