அடுத்த நான்கு முதல் ஆறு மாத நெருக்கடிக்குத் தேவையான இன்சுலின் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதால், தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சருமான டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கொழும்பில் தெரிவித்தார்.
அடுத்த செப்டம்பர் மாதம் வரை நாட்டில் போதுமான அளவு இன்சுலின் இருப்பு இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், இன்சுலின் பற்றாக்குறை இருப்பதாகவும், தேசிய தேவைகளை இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என்றும் சுகாதார தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு வரும் பிரசாரத்திற்கு பதிலளித்த. அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.