தரமற்ற இம்யூனோகுளோபு லின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிரான வழக்கை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மூவர் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணை செய்ய வேண்டும் என்று சட்ட மா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தக் கோரிக்கை அடங்கிய கடிதத்தை சட்ட மா அதிபர் பிரதம நீதியரசருக்கு அனுப் பிவைத்துள்ளார். அந்தக் கடிதத்தில், தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததால் இலங்கைக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
அரசுக்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் பொதுமக் களுக்கு ஏற்பட்ட தீங்கைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை 2018ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க சிறப்புச் சட்டத்தின் கீழ் ஒரு சிறப்பு வழக்காகக் கருதி, நிரந்தர மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று சட்ட மா அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய சந்தேகத்தின்பேரில், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவை பொது சொத்துச் சட்டத்தின் கீழ் பிணையில் விடுவிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரம்புக்வெல்ல பல சந்தர்ப்பங்களில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விசாரணை செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தரமற்ற மருந்து இறக்குமதிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் குற்றச�