தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளிமாவட்டங்களுக்கு பயணித்த பொதுமக்கள் மீண்டும் தலைநகர் திரும்புவதற்கான விசேட போக்குவரத்து திட்டம் 15.04.2025 ஆரம்பிக்கப்படவுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தொடருந்து திணைக்களம் என்பன இணைந்து இந்த விசேட போக்குவரத்து திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளன.
இதன்படி, பொதுமக்களின் நலன்கருதி சுமார் 350 பேருந்துகளை மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்துவதற்கு இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த சேவைகள் 15.04.2025 பிற்பகல் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் ஆர்.டி சந்திரசிறி எமது செய்திப்பிரிவுக்குத் தெரிவித்தார்.
அதேநேரம் விசேட தொடருந்து சேவைகளும் 15.04.2025 முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.