ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் 2025 – 2027 வருடத்திற்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (31.03.2025) கொழும்பில் நடைபெற்றது.
இதில், ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு, பிரதித் தலைவர்களாக ஜயந்த தர்மசேன மற்றும் ரவின் விக்ரமரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
செயலாளராக பந்துல திசாநாயக்கவும், பொருளாளர் பதவிக்கு சுஜீவ கொடலியத்தவும் தெரிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, உப செயலாளர் பதவிக்கு கிரிஷாந்த கப்புவத்தவும் உப பொருளாளராக லவந்த விக்ரமசிங்கவும் தெரிவாகியுள்ளனர்.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

March 31, 2025
0 Comment
104 Views