இஸ்மதுல் றஹுமான்
போலியான கனேடிய வீசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்கு செல்ல முயற்சித்த 11 இலங்கையர்கள் மற்றும் அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த தரகர் ஒருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேரும் முனையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 24ம் திகதி இரவு
6.40 மணிக்கு டுபாய் நோக்கிச் செல்லும் ஸ்ரீ லங்கா விமான சேவையின் யூ எல் 225 இலக்க விமானத்தில் டுபாய் சென்று அங்கிருந்து கனடா டொரொன்டோ செல்ல திட்டமிட்டு இருந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 35-40 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும் கொழும்பு, கழுத்தறை, அநுராதபுரம், பதுள்ளை மாவட்டங்களைச் சேர்ந்த அரசாங்க ஊழியர்கள், வர்த்தகர்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து அண்மையில் இலங்கை வந்தவர்கள் உள்ளடங்குவதாக சுங்க அதிகாரகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைக்காக விமான நிலைய குற்றவியல் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்க உள்ளனர்