ஏ.எஸ்.எம்.ஜாவித் 2025.03.24
ஹம்பகா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் சங்கத்தின் வரலாறும் கடந்த கால வேலைத்திட்டங்கள் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக ஹம்பகா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் சங்கம் இன மத பேதமின்றி ஹம்பகா மாவட்டத்தில் மூவின மக்களுக்கும் பல்வேறு இலவச சேவைகளை வழங்கி வருகின்றது இந்த வகையில் மாணவர்களின் கல்வி விடயத்தில் முக்கியத்துவம் கொடுத்த மாணவர்களுக்கு பல்வேறுபட்ட கருத்தரங்குகளையும், போட்டி நிகழ்ச்சிகளையும் நடாத்தி குறிப்பாக ஏழை மாணவர்களையும் உள்ளடக்கியதாக மேற்படி வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது.
ஹம்பகா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் சங்கத்தின் ஏற்பாட்டில் விசேட இப்தார் நிகழ்வு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) மாளிகாவத்தை செனித் வரவேற்பு மண்டபத்தில் அமைப்பின் தலைவர் எம்.ஆர்.மொஹிடீன் தலைமையில் இட்மபெற்ற நிகழ்வின்போது நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவிடம் தலைவர் மற்றும் சங்கத்தின் இணைச் செயலாளர்களான ஏ.ஆர்.எம்.முஸம்மில், எம்.என்.எம்.நளீம் உள்ளிட்ட சங்கத்தின் அங்கத்தவர்களினால் சங்கத்தின் வரலாறும் கடந்த கால வேலைத்திட்ட தொடர்பான அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஸீனத் ரேடிங் பிறைவேட் லிமிட்டட் தலைவர் ஏ.எச்.எம்.மாஹிரும் சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளித்தார். சங்கத்தின் அங்கத்தவர்கள் உற்படி பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.