- நீர்கொழும்பு பிரதேச செயலாளர்
இஸ்மதுல் றஹுமான்
பெண்களாகிய நாம் உரிமைகளைக் கேட்போம். அதற்கு முன் கடமைகளை, பொறுப்புக்களை நிறைவேற்றுவோம். பெண்களுக்கு இடையூறு ஏற்படுகிறது துஷ்பிரயோகம் இடம்பெறுவதாக கூறுகிறார்கள். எமது நடை உடை பாவனை அங்க அலங்காரங்களினால் நாம் இதற்கு ஈர்க்கப்படுகிறோமா என சிந்திக்க வேண்டியுள்ளது என நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ரசிக்க மல்லவாரச்சி நீர்கொழும்பு பிரதேச செயலகத்தினால் 11ம் திகதி செவ்வாய் கிழமை இடம்பெற்ற சரவதேச மகளிர் தின நிகழ்வில் உரையாற்றும்போது போது கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது நாம் இம்முறை நீர்கொழும்பில் மங்கிப் போயுள்ள பிரசித்திபெற்ற "நீர்கொழும்பு அலுவா" தயாரிக்கும் போட்டியை மகளிர் சங்கங்களுக்கிடையே நடாத்தினோம். கடந்த முறை வகை வகையான மீன் உணவு தயாரிக்கும் போட்டியை இவ்வாறு நடாத்தினோம்.
சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய பல்வேறு கட்டங்களில் கலந்துரையாடியுள்ளோம்.அதன் அடிப்படையில் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினருடன் பேசி நீர்கொழும்புக்குரிய நீர்கொழும்பு அலுவா இலங்கை முழுவதும் பேசப்படும் சிற்றுண்டி யாகும். இதனை தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் உள்ளனர். இதனை மங்கிப்போக விடமுடியாது. புதிய தலைமுறையினருக்கும் இது தெரியாது. இப்பிரதேசத்தில் உள்ளவர்களுக்கும் இது பற்றி தெரியாவிட்டால் பயனில்லை.
சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்காக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் நீர்கொழும்பு அலுவாவை தேடி சுவைத்து விட்டுப் போகும் நிலமைக்கு இதனை பிரசித்தப்படுத்த வேண்டும். அதனால்தான் இந்தப் போட்டியை ஏற்பாடு செய்தோம்.
பிரதேச செயலாளர் ரசிக்க மல்லவாரச்சி மகளிர் தொடர்பாக கூறுகையில் மகளிர் தினத்தில் பெண் குழந்தை முதல் வயோதிபப் பெண் வரை பேசப்படுகின்றன. எம்மைப் பற்றி சகலரும் பேசுவது மகிழ்ச்சியான நாள். அண்மையில் எயார் லங்கா விமானத்தில் பெண் விமானியுடன் பெண்கள் மாத்திரம் உள்ளடக்கிய குழுவொன்று பயணம் செய்தது. மகளிர் மட்டும் உள்ள ஹோட்டல்களும் இருக்கின்றன.
மகளிர் அபிமானத்தை ஒரு நாளைக்கு மட்டுப்படுத்தாமல் சகல நாட்களிலும் பாதுகாப்போம். எமது செயலகத்தில் நிறைவேற்று அதிகாரிகள் சகலரும் பெண்களே. பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் நீர்கொழும்பு பிரதேச செயலகத்தில் முன்னனி உறுப்பினர்களும் பெண்கள். நாம் எல்லோரும் ஒரு நாள் சரி எம்மைப்பற்றிப் பேசுவோம்.
நீங்கள் எல்லோரும் வீடுகளில் பல்வேறு வேலைகளை செய்கிறீர்கள். அதற்கு கணிப்பீடு கிடைக்கலாம் கிடைக்காமல் விடலாம். பிள்ளைகளை பராமரிக்கிறோம், மருந்து கொடுக்கிறோம், கற்பிக்கிறோம், பாடசாலைக்கு அழைத்துச் செல்கிறோம் என பல்வேறு தொழில்களை செய்கிறோம். ஆசிரியராக, தாதியாக, சாரதியாக போன்ற பல துறைகளில் செயல்படுகிறோம். இந்த சகல துறைகளினதும் அனுபவத்தால் நீங்கள் குடும்பத் தலைவியாக இருக்கிறீர்கள். தாய், தந்தை இல்லாவிட்டால் சகலதும் தோல்வியை.
நாம் எமது உரிமைகளை கேட்போம். அதற்கு முன் எமது கடமைகளை பொறுப்புக்களை நிறைவேற்றுவோம். பெண்கள் தொடர்பாக சமூகம் பிழையான கண்ணோட்டத்தில் பார்கிறது. பெண்களுக்கு இடையூறு ஏற்படுகின்றன. துஷ்பிரயோகம் ஏற்படுவதாக கூறுகிறார்கள். நாம் திரும்பிப் பார்ப்போம் எமது நடை உடை பாவனை அங்க அலங்காரம் உரிய முறையில் உள்ளதா என்பதை சிந்திப்போம். எமது நடவடிக்கைகளினால் நாம் ஈர்க்கப்பட்டோமா எனவும் சிந்திக்க வேண்டும். நாம் முன்மாதிரி பெண்களாக வாழ்ந்து காட்டுவோம். தாய், சகோதரி, மனைவி,மகள் என அர்பனிப்புடன் செயல்படும் உங்களை மெச்சுகிறேன் என்றார்.