சுனாமி அனர்த்தத்தினால் பெரலிய ரயில் நிலையத்திற்கு அருகில் விபத்திற்குள்ளான பயணிகள் மற்றும் ரயில் ஊழியர்களை நினைவுகூரும் வகையில் இன்று (26) காலை 6.50 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து பெலியத்த வரை விசேட ரயில் ஒன்று இயக்கப்பட்டது.
பெரலிய ரயில் நிலையத்திற்கு அருகில் அந்த சோகத்தை சந்தித்த இயந்திரத்தை பயன்படுத்தி இந்த ரயில் இயக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
அதில் பயணிக்கும் பயணிகள் பெரலிய ரயில் நிலையத்தில் சுமார் 10 நிமிடங்கள் நின்று அஞ்சலி செலுத்தவுள்ளனர்.