இஸ்மதுல் றஹுமான்
வெளிநாடு அனுப்புவதாகவும் வங்கிகளில் கடன் பெறுவதற்கான வசதிகளை செய்து தருவதாகவும் கூறி நாட்டின் பல பாகசங்களில் ஆட்களை ஏமாற்றி பணம் பெற்று மோசடி செய்த சட்டதரணி கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டார்.
சந்தேக நபர் தொடர்பாக நீர்கொழும்பு பிராந்திய மோசடி விசாரணை பிரிவிற்கு பல முறைப்பாடுகள் கிடைக்குப்
பெற்றிருந்தன. மேலும் நீதிமன்றங்கள் மூலம் கைது செய்வதற்கான பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகி இருந்த இவர் நீர்கொழும்புக்கு வந்துள்ளதா கிடைத்த தகவலுக்கு அமைய கைது செய்யப்பட்டார்.
நீர்கொழும்பு பிராந்திய மோசடி புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதர் எம்.எச்.ஆர். முனசிங்க தலைமையில் பொலிஸ் பரிசோதகர் விஜயரத்ன, பொலிஸ் சார்ஜன்களான ருவன்(34485), வீரக்கொடி(33536), பென் பொலிஸ் சார்ஜன் சமன்லதா(1840), பெண் பொலிஸ் கான்ஸ்டபல் நவோமி(11408) ஆகியோரடங்கிய பொலிஸ் குழுவினரே சந்தேக நபரை கைது செய்தனர்.
சட்டதரணி எனக் கூறும் நீர்கொழும்பு பிரதான வீதியைச் சேர்ந்த 40வயதான புத்திக வன்சரத்ன என்பவரே கைது செய்யப்பட்டார்.
இவர் பயணித்த வாகணத்தில் இருந்து ஆறு கடவுள் சீட்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகணம் மற்றும் கடவுச் சீட்டுகளை பொலிஸ் பொறுப்பில் எடுத்து இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதான நீதிபதி ரகித அபேசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இம்மாதம் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த நபரின் மோசடியில் யாராவது சிக்கி இருந்தால் நீர்கொழும்பு பிராந்திய மோசடி விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரிக்கு
031 2227210 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.