வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரிடம் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது.
மல்லாவிப் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், 80 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.