ஹங்வெல்ல மற்றும் கம்பஹா பகுதியில் நிதி மோசடியில் ஈடுபட்ட 40 வெளிநாட்டவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த திணைக்களத்துக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே ஹங்வெல்ல பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக இவர்கள் நிதிமோசடியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைதானவர்களில் சீனாவைச் சேர்ந்த 29ஆண்களும் ஒரு பெண்ணும், இந்தியாவைச் சேர்ந்த 3 பெண்களும் ஒரு ஆணும், தாய்லாந்தைச் சேர்ந்த 2 ஆண்களும் 4 பெண்களும் அடங்குவதாகக் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தடையவியல் பரிசோதனைக்காக 499 கையடக்க தொலைபேசிகளும், 25 மடிக்கணணிகளும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாகக் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.