ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே உள்ள அமெரிக்க இராணுவ தள வளாகத்தில் குண்டு வெடித்தது.
அமெரிக்க இராணுவம் பயன்படுத்திய தளத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் ஜனாதிபதி மசூத் பெசென்கியன் 11.09.2024 பாக்தாத்துக்குச் செல்லவுள்ள நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.