இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு
நீர்கொழும்பு, பெரியமுல்லை பிரதேசத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தொடர்ந்து பெய்யும் கடும் மழையினால் நீர்கொழும்பு கட்டான தொகுதிகளின் எல்லையில் அமைந்துள்ள “தெபாஎல” நீரோடை பெருக்கெடுத்ததில் நீர்கொழும்பு, பெரியமுல்லை பிரதேசத்தில் கோமஸ்வத்த, றப்பர்வத்த, செல்லகந்த, தெனியவத்த, மைமன்கொடல்ல, தழுபொத்த ஆகிய பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வீதியில் சில இடங்களில் 4 அடிக்கு மேல வெள்ளநீர் காட்சியளிக்கின்றது. வீடுகளுக்குள்ழும் நீர் புகுந்துள்ளதனால் சிலர் வீட்டை விட்டு வெளியேறி உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். மற்றும் சிலர் நீரிலேயே தங்கியுள்ளனர்.
தொடர்ந்தும் மழை பெய்வதனால் பாதிப்பு அதிகரிக்குமென மக்கள் அஞ்சுகின்றனர்.
வெள்ளத்தினால் பாதிக்கபட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்க பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.