அடுத்த 10 நாட்களுக்குள் முட்டை இறக்குமதி மீண்டும் தொடங்கும் என்று இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்தது.
இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டார்.
உள்ளுர் சந்தையில் முட்டையொன்று 50 ரூபாய்க்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், முட்டை இறக்குமதிக்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி மாதம் ஒன்றுக்கு 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளன










