பால்மா இறக்குமதியாளர்களுடன் அடுத்த சில தினங்களில் கலந்துரையாடல் நடத்தப்படும் என வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ(Nalin Fernando) தெரிவித்துள்ளார்.
இதன்போது பால்மாவின் விலையைக் குறைப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
இதனை விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (30) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, பால்மாவின் விலையைக் குறைக்க எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், விலையைக் கணக்கிடுமாறும் நுகர்வோர் அதிகார சபைக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், நுகர்வோருக்குத் தேவையான சலுகைகளை வழங்குவது தொடர்பில் இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.