பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க, பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சட்டமா அதிபராக கடமையாற்றிய சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் கடந்த 26 ஆம் திகதி முடிவடைந்த நிலையில், சட்டமா அதிபர் பதவி வெற்றிடமாகவே இருந்தது.
இதன்படி, பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்கவை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அவரை சட்டமா அதிபர் பதவிக்கு நியமிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரை எதிர்வரும் காலங்களில் சட்ட சபைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
பாரிந்த ரணசிங்க இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஏ. பாரிந்த ரணசிங்கவின் மகன் ஆவார்.