2024 T 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிக்காக சென்ற இலங்கை கிரிக்கெட் அணி, ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக சுற்றுலாத்துறை, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
விளையாட்டு வீரர்களின் நலனுக்காக அரசாங்கம் பாரிய செலவீனத்தை மேற்கொள்ளும் நிலையில், சர்வதேச அளவில் சாதனை படைத்த 60 விளையாட்டு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு மாதாந்தம் தலா 50,000 ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் தெரிவு செய்யப்பட்ட 850 விளையாட்டு வீரர்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் 24.06.2024 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.
பாடசாலை ரக்பி வீரர்களின் பாதுகாப்பிற்காக, அவர்களுக்கு காப்புறுதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.