சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 386 இலட்சம் ரூபாய் பெறுமதியான அரிசி கையிருப்பு சுங்கப் பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த அரிசி கையிருப்பு தமிழ் நாட்டில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்போது 54,000 கிலோகிராம் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத அரிசி தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுங்கப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.