பெண்களை காதி நீதிபதிகளாக நியமிக்க தீர்மானம் எடுத்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
காதி நீதிபதிகளின் தகைமை தொடர்பில் சுயாதீன நீதிமன்ற கமிஷனிடம் முன்மொழிவை பெறவும் காதி நீதிமன்றத்தில் விவாகரத்து தீர்ப்புக்களை 1 வருடத்திற்குள் கொடுக்க முடியாவிட்டால் அந்த வழக்கை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றவும் யோசனை முன்வைத்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார்.