இஸ்மதுல் றஹுமான்
மிகவும் சர்ச்சைக்குறியதாக காணப்பட்ட நீர்கொழும்பு, பிடிப்பன மீன் விற்பனை நிலையத்திற்கு பொறுப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மீன் விற்பனை நிலையம் தொடர்பாக நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றில் விசாரிக்கப்படும் வழக்கில் மாவட்ட நீதிபதி லலித் கன்னங்கர கடந்த பெப்ரவரி மாதம் 2ம் திகதி வழங்கிய இடைக்கால கட்டளைக்கு இனங்க பராமரிப்பு மற்றும் முகாமைத்துவத்திற்காக ஒருவரை நியமிக்கும் நிகழ்வு அண்மையில் நீதிமன்ற அதிகாரிகளின் முன்னிலையில் மீன் விற்பனை நிலைய வளவில் இடம் பெற்றது. இதன் போது நீர்கொழும்பு வலய தலைமை பிதா சிஸ்வாஸ் த குரூஸ், கொழும்பு பேராயரின் பிரதிநிதி சிறில் காமினி பிதாவும் பிடிப்பன தேவஸ்தான பங்குத் தந்தைகளும் கலந்துகொண்டனர்.
இந்த மீன் லெல்லம் தொடர்பாக கத்தோலிக்க சபைக்கும் அதனை பரிபாலித்த அதிகாரிகளுக்கும் இடையே சர்ச்சைக்குறிய பல முரன்பாடுகள் ஏற்பட்டன. சில சந்தர்பங்களில் மோதல் நிலையும் இடம்பெற்றன.
பொலிஸ் பாதுகாப்புடன் நடந்த இந்த நிகழ்ச்சியின் போது கருத்து தெரிவித்த பிதா சிறில் காமினி பிடிபன மீன் விற்பனை நிலையத்தின் உரிமை எவருக்கு என்பது தொடர்பாக சரியான தீர்வைப் பெறுவதற்காக வழக்கு நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. அந்த வழக்கில் லெல்லத்தின் பரிபாலனம் மற்றும் பொறுப்பாளராக முகாமையாளர் ஒருவரை நியமிக்க வழங்கப்பட்ட இடைகால கட்டளைக்கு அமைய நீதிமன்றத்தின் ஊடாக பொறுப்பாளரை நியமிப்பதே இன்று இடம் பெற்றது. அது சட்டத்திற்கு உட்பட்டது. அவருக்கு இன்று முதல் அந்த அதிகாரம் கிடைக்கின்றது.
இது நடைபெற்றது நீதிமன்ற பிஸ்கால் அதிகாரி மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் முன்னிலையிலாகும். அதனால் அந்த நபர் சம்பூரணமாக நீதிமன்றுக்கு பொறுப்புக் கூற கட்டுப்பட்டுள்ளார். இந்த நேரம் முதல் மீன் விற்பனை நிலையத்தில் சகலவிதமான விற்பனை மற்றும் கொள்முதல் செய்யமுடியும் என்றார்.