2021ஆம் ஆண்டு குழுவுக்கான மாணவர் தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப் பரீட்சைக்கு சமுகமளிக்காத விண்ணப்பதாரர்களுக்கான மற்றுமொரு திகதியை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இவர்களுக்கென நாளை 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் நேர்முகப் பரீட்சையை சுகாதார அமைச்சில் நடத்துவதற்கு தயார் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம் II) சாமிக்க எச்.கமகே தெரிவித்துள்ளார்.
இதுவரை நடந்த நேர்முகப் பரீட்சைக்கு சமுகமளிக்க தவறிய விண்ணப்பதாரர்கள் நாளை நடத்தப்படவுள்ள நேர்முகப் பரீட்சைக்கு தவறாது சமுகமளிக்க வேண்டுமென்றும் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம் II) சாமிக்க எச்.கமகே தெரிவித்துள்ளார்.










