இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் குழந்தைகள் பராமரிப்பு பிரிவிற்கு அத்தியவசிய தேவையாக இருந்த மூச்சு எடுப்பதை இலகுபடுத்துவதற்கான BUbble -CpAP இயந்திரம் ஒன்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவினால் வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது.
நீர்கொழும்பு வைத்தியசாலை பணிப்பாளர் பிரியன்த தென்னகோன், சிறுவர் விஷேட வைத்தியர் அருனி விஜேசிங்க ஆகியோரிடம் இந்த இயந்திரம் எதிர் கட்சி தலைவரால் கையளிக்கப்பட்டது. பாராளமன்ற உறுப்பினர் டாக்டர் காவிந்த ஜயவர்தன,
இதற்காக நிதி உதவி வழங்கிய சிரான் விஜயகுணவர்தன மற்றும் வைத்தியசாலை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.