இஸ்மதுல் றஹுமான்
4 கோடி 60 இலட்சம் ரூபா பெறுமதியான 46 கிலோகிராம் குஷ் போதைப் பொருளுடன் பிரிதானிய யுவதியை இலங்கை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தாய்லாந்து, பெங்கொக் நகரிலிருந்து விமான மூலம் கட்டுநாயக்க விமான நிலையம் வந்த இந்த பிரிதானிய இளம் பெண் சுங்க வளாகத்தை தாண்டிச் செல்ல முயற்சித்த போது சுங்க அதிகாரிகள் அவரை நிறுத்தி பரிசோதித்து வேளையில் அவரின் பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த குஷ் போதைப் பொருள் கைபற்றப்பட்டன.
அதில் 46 கிலோ கிராம் குஷ் போதைப் பொருள் இருந்துள்ளது. அதன் சந்தைப் பெறுமானம் 460 மில்லியன் ரூபா.
சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் விமான நிலையத்தில் அன்மையில் கைபற்றிய பாரிய அளவான குஷ் போதைப் பொருள் இதுவென சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் போதைப் பொருளையும் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைந்தனர்.