பிரதம இன்ஸ்பெக்டர் உட்பட 32 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இடமாற்றங்களின் விளைவாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவிகளை வகித்த 10 அதிகாரிகள் தங்கள் பொறுப்பதிகாரி பதவிகளை இழந்துள்ளனர்.
குறித்த 10 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதேபோல் 12 அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பதிகாரி பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளில் 26 பேர் பிரதம இன்ஸ்பெக்டர்கள் ஆவர்.