இஸ்மதுல் றஹுமான்
32 கோடி 15 இலச்சத்து 90 ஆயிரம் ரூபா மதிப்புள்ள "குஷ்" போதைப் பொருளை நாட்டிற்குள் கொண்டு வந்த வெளிநாட்டு பயண ஜோடியை கட்டுநாயக்க சர்வதேசம் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் குழுவினர் கைது செய்துள்ளனர்.
தாய்லாந்து ,பெங்கொக் நகரிலிருந்த இலங்கை விமான சேவையின் யூ.எல்.- 403 இலக்க விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள் கொண்டுவந்த பயணப் பொதிகள் இரண்டை பரீசீலித்த வேளையில் சூசகமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 23 பக்கட்டுகளில் 32 கிலோ கிராம் 159 கிராம் குஷ் போதைப பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரும் கனடாவின் ஆல்பர்ட்டாவில் வசிப்பவர்கள். 25 வயதான அந்த நபர் அந்நாட்டில் உள்ள ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது 29 வயது மனைவி இன்னும் வேலை தேடி வருபவர் என தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைக்காக கைது செய்யப்பட்ட இருவரையும் அவர்கள் கொண்டு வந்த போதைப்பொருட்களையும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.









