இந்தியாவின் அகமதாபாத் நகரில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, ஒருவர் மட்டும் உயிர் தப்பியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிர் தப்பியவருக்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன, மேலும் அவர் உதவியின்றி விபத்து நடந்த இடத்திலிருந்து நடந்து செல்ல முடிந்தது.
அவர் பிரித்தானிய குடிமகனான விஷ்வாஸ் குமார் ரமேஷ் (40) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் விமானத்தில் 11A இருக்கையில் அமர்ந்திருந்தார்.
விஷ்வாஸ் குமார் ரமேஷ், தனது சகோதரர் அஜய் குமார் ரமேஷுடன் இங்கிலாந்து திரும்பிக் கொண்டிருந்தார்.
விமானத்தில் இருந்த 242 பயணிகளில் இவரே ஒரே உயிர் பிழைத்தவர் என நம்பப்படுகிறது.
லண்டன் செல்லவிருந்த போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், பிற்பகல் 1:39 மணிக்கு புறப்பட்டு ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் விபத்துக்குள்ளானது.
விமானத்தில் மொத்தம் 230 பயணிகள் இருந்தனர்.
இதில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரித்தானியர்கள், 7 பேர் போர்ச்சுகல் நாட்டவர்கள் மற்றும் ஒருவர் கனடா நாட்டவர் ஆவர்.