அடுத்த வருடம் முதல் சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகளை உரிய காலப்பகுதியில் நடத்துவதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, 2026 ஆம் ஆண்டிற்கான க.பொ.த (உ/த) பரீட்சையை ஓகஸ்ட் மாத்திலும் , 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சா/த) பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சா/த) பரீட்சையை அடுத்த ஆண்டு பெப்ரவரியில் நடத்துவதற்கும் கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளது. இதற்கமைய பாடசாலை விடுமுறை, உரிய காலப்பகுதியில் வழங்கப்பட வேண்டும் என கல்வியமைச்சு வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ பாடசாலை கல்வித் தவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.