2024 புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு AMYS நிறுவனத்தினால் இருவேறு போட்டிகளாக நடாத்தப்பட்ட “ரமழான் பரிசு மழை” மற்றும் “அர் ரய்யான்” போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்வு கடந்த 16.10.2024ஆம் திகதி புதன் கிழமை நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு நிறுவனத்தின் முகாமைத்துவப்பணிப்பாளர் அஷ் ஷெய்க் எம்.எஸ்.எம். தாஸீம் (கபூரி) அவர்கள் தலைமை தாங்கியதுடன், நிகழ்வின் பிரதம அதிதியாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் கௌரவ எம்.எஸ்.எம். நவாஸ் அவர்கள் கலந்து கொண்துடன் விசேட அதிதியாக அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ் ஷெய்க் அர்கம் நூராமித் அவர்கள் கலந்து கொண்டார்.
நிகழ்வில் AMYS நிறுவனத்தின் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. ஏ.ஜே.எம். வாரித் (MBA) அவர்களும் கல்வி மற்றும் சமூக சேவை தொண்டு நிறுவனங்களின் பணிப்பாளர்கள், இஸ்லாமிய அமைப்புக்களின் தலைவர்கள், அவற்றின் பிரதிநிதிகள் பலரும் கலந்து சிறப்பித்ததுடன், போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற போட்டியாளர்கள் உற்பட அவர்களுடைய பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
அறிவுத் தேடலை விருத்தி செய்து, ரமழானின் பொழுதுகளை உயிரோட்டமுள்ளதாக பயன்படுத்திடும் நோக்கில் மேற்படி போட்டி நிகழ்ச்சிகள் AMYS நிறுவனத்தினால் தொடதேர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில், “ரமழான் பரிசு மழை” போட்டி நிகழ்ச்சி தொடர்ந்தும் 12ஆவது தடவையாக நடாத்தப்பட்டு வருவதுடன் ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்துடன் இணைந்து 06 ஆவது தடவையாக வெற்றிகரமாக நடாத்தப்பட்டு வருகின்றது. அத்துடன், இப்போட்டி நிகழ்ச்சி இம்முறை தனித்துவமான இஸ்லாமிய நிகழ்ச்சிகளை வழங்கி வரும் டிஜிட்டல் ஊடகமான அஷ் ஷெய்க் இஸ்மாயீல் ஸலபி அவர்களின் உத்தியோகபூர்வ யூடியூப் அலைவரிசையுடன் இணைந்தும் நடாத்தப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.
அத்துடன், “அர் ரய்யான்” போட்டி நிகழ்ச்சியானது; AMYS நிறுவனத்தினால் தொடர்ந்தும் 03 ஆவது தடவையாக நடாத்தப்பட்டதுடன் இம்முறை கெபிடல் எப்.எம் மற்றும் கெபிடல் டீவியுடன் இணைந்து நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நடைபெற்ற இரு போட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களையும் பெற்றுக் கொண்ட வெற்றியாளர்களின் பெயர் விபரங்களை கீழே காணலாம்.
“ரமழான் பரிசு மழை” போட்டி நிகழ்ச்சி
01. முதல் பரிசு ரூ. 50,000 A.R. Jamsith Hasan- Musali. Mannar
02. இரண்டாம் பரிசு ரூ. 30,000 Fazeena Sinnalebbe – Eravur
03. மூன்றாம் பரிசு ரூ. 20,000 M.B. Naseer Jan – Shafi nagar, Mutur
“அர் ரய்யான்” போட்டி நிகழ்ச்சி
01. முதல் பரிசு ரூ. 30.000.00 A.I. Maheedha- Alupotha, Badalkumbura
02. இரண்டாம் பரிசு ரூ. 20,000.00 Hafsa Nasik-Colombo 12
03. மூன்றாம் பரிசு ரூ.15,000.00 – M.N.F. Shahama- Daskara, Kandy


