இஸ்மதுல் றஹுமான்
18 கோடி 12 இலட்சம் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப் பொருளை விமான நிலையத்திற்கு எடுத்து வந்து எதுவும் தெரிவிக்கிமல் கிறீன் செனல் ஊடாக வெளியேறும் போது வெளிநாட்டு பெண் விமான பயணியை சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் நேற்று 22ம் திகதி அதிகாலை கைது செய்துள்ளனர்.
37 வயது கணடா நாட்டு பெண்னே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இந்த போதைப் பொருளை கணடா, மொண்ட்ரியல் நகரிலிருந்து கட்டார் நாட்டின் தோஹா நகருக்கு எடுத்து வந்து அங்கிருந்து கட்டார் விமான சேவையின் கிவ். ஆர்.- 662 இலக்க விமானத்தில் நேற்று 22ம் திகதி அதிகாலை 2.50 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் எடுத்து வந்த பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த 18 கிலோ கிராம் 123 கிராம் ஹஷீஷ் போதைப் பொருளை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதன் சந்தைப் பெறுமதி சுமார் 18 கோடி 12 இலட்சம் ரூபாவாகும்.
கைது செய்யப்பட்ட கணடா நாட்டு பெண்ணை யும் கைபற்றப்பட்ட போதைப் பொருளையும் மேலதிக விசாரணைக்காக விமான நிலைய பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுளளன.