159வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு 03.09.2025 புதன்கிழமை பொலிஸ் பொலிஸ் மேலதிகப் படைத் தலைமையகத்தில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன
இதற்காக கொழும்பு போக்குவரத்துப் பிரிவினால் விசேட போக்குவரத்துத் ஒழுங்கு திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் உள்ள தும்முல்ல சந்திப்பிலிருந்து திம்பிரிகஸ்யாய சந்தி வரை ஹேவ்லாக் வீதியில் பயணிக்கவிருப்போர் பின்வரும் அறிவுறுத்தலை பின்பற்றுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பொலிஸ் மேலதிகப் படைத் தலைமையகத்திற்கு எதிரே உள்ள கொழும்பின் வெளியேறும் வீதியில் நிறுவப்பட்ட பேருந்து நிறுத்தம் 03.09.2025 அன்று பிற்பகல் 02.30 மணி முதல் மாலை 07.00 மணி வரை ஹேவ்லாக் மார்க்கத்தில் உள்ள-பொன்சேகா வீதியின் சந்தியில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்திற்கு தற்காலிகமாக மாற்றப்படும்.
பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவின் தும்முல்ல சந்தியிலிருந்து திம்பிரிகஸ்யாய சந்தி வரையான ஹேவ்லாக் வீதியில் கனரக வாகனப் போக்குவரத்து (கொள்கலன் ஊர்திகள் மற்றும் டிப்பர் லொறிகள்) 03.09.2025 அன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 700 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.