135வது தேசிய தொல்பொருள் தினத்தை முன்னிட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கான செயலமர்வு ஜூலை 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் வெலிவேரிய, ஹீன்பன்வில பூர்வாராம விஹாரையில்..
135வது தேசிய தொல்பொருள் தினத்தை முன்னிட்டு, மேல் மாகாண தொல்பொருள் அலுவலகத்தின் ஊடாக ஜூலை மாதம் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை கம்பஹா வெலிவேரியவில் உள்ள ஹீன்பன்வில பூர்வாராம விஹாரையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான செயலமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனுடன் இணைந்து, இந்த இரண்டு நாட்களிலும் தொல்பொருள் கண்காட்சி மற்றும் புத்தக விற்பனையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.