120 சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதி பத்திரம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 120 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.
முச்சக்கர வண்டிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கான உரிமங்களைப் பெறுவதற்கான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டாலும், சுற்றுலாப் பயணிகள் தங்கள் வீசா மற்றும் சொந்த நாட்டு உரிமத்தின் அடிப்படையில் செல்லுபடியாகும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என்று அவர் கூறினார்.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வெரஹெரா கிளை கடந்த ஆண்டுகளில் வெளிநாட்டினருக்கு மொத்தம் 14,293 நிரந்தர மற்றும் தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை வழங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.