கொழும்பு
பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சிட்னி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக 11 மாதங்களுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்ப உள்ளார்.தனுஷ்க இன்று இரவு இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டியின் போது பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டதையடுத்து அவர் மீது இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்காலிகத் தடை விதித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 06 ஆம் திகதி அதிகாலை இருபதுக்கு 20 உலகக் கோப்பைக்காக இலங்கை கிரிக்கெட் அணி தங்கியிருந்த ஹயாட் ரீஜென்சியில் குணதிலக கைது செய்யப்பட்டார்.