நுவரெலியா, ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவை பார்வையிட வருபவர்கள் பூங்காவின் விதிமுறைகளை மீறி செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஹோட்டன் சமவெளி தேசிய பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சட்ட விரோதமாக செயற்படுபவர்களுக்கு சம்பவ இடத்திலேயே 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் நீலக் குறிஞ்சி மலர்களின் அழகைக் காண மக்கள் வருகை தரும் நிலையில், அவர்களுக்கென்று விசேட நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.