ஹம்பாந்தோட்டை பறவை பூங்காவில் உள்ள களஞ்சியசாலையொன்றில் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 4 கஞ்சா செடிகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
வலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையின்போதே குறித்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

July 12, 2025
0 Comment
14 Views