மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் பெய்த கனமழையால், ஹட்டன் சமனலகம காலனியில் உள்ள வீடொன்றில் இன்று (19) அதிகாலை 4:30 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் வீட்டின் சுவர்கள் அடித்துச் செல்லப்பட்டு, வீட்டுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
வீட்டில் வசித்து வந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு டிக்கோயா நகர சபை அறிவுறுத்தியுள்ளது.
மண்சரிவு அபாயம் உள்ள பகுதியாக சமனலகம் காலனியை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் முன்பே அடையாளம் கண்டிருந்தது. அங்கு வசிக்கும் பலருக்கு ஏற்கனவே மாற்று நிலம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

July 19, 2025
0 Comment
51 Views