பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மேலும் ஒரு கைது உத்தரவை சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் பிறப்பித்துள்ளது.
மனிதகுலத்துக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்ட வழக்கில் ஹசீனாவையும், மேலும் 28 பேரையும் கைது செய்ய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமா்வில் இந்த உத்தரவு புதன்கிழமை (8) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களை ஒக்டோபா் 22-ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.