சில்மியா யூசுப்
ஸம் ஸம் நிறுவனத்தின் தலைவர் யூசுப் முப்தியின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கு கண்டிக்கான ஒரு சுற்றுலா ஏற்பாடு 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யபட்டிருந்தது.
இந்நிகழ்வானது கண்டி, எலமல்தெனியவில் அமைந்துள்ள ஸம் ஸம் பவுண்டேஷனின் பயிற்சிக் கல்லூரி “Green Community Experience Centre” இல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
இதில் பிரதம அதிதியாக பவுண்டேஷனின் தலைவர் கௌரவ முப்தி யூசுப் ஹனீபா, பிரதம நிறைவேற்று அதிகாரி சகோ. ஹிஷாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஊடகவியலாளர்கள் ஸம் ஸம் பவுண்டேஷனின் பயிற்சிக் கல்லூரி “Green Community Experience Centre” இனை பார்வையிட்டதோடு ஊடகவியலாளர்களுக்கு மத்தியில் வலையமைப்பை பலப்படுத்திக் கொள்வதற்கும் வளங்களை பகிர்ந்து கொள்வதற்குமான பல விடயங்கள் இதில் கலந்தாலோசிக்கப்பட்டது.
சுமார் 50 ஊடகவியலாளர்களுக்கு மாத்திரமே இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்பட்டதுடன் ஏனையோருக்கும் மிக விரைவில் இந்நிகழ்ச்சியை நடாத்த இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.








புகைப்படங்கள் : Ashraff Samad