இலங்கைக்கு அப்பால் அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரசு அமீரகம், அவுஸ்திரேலியா, கனடா உட்பட பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் சமூகத்தினரும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தீபாவளி பண்டிகையைக் கொண்டாடியுள்ளார்.
அவரது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஐந்து திரி பித்தளை விளக்கை ஏற்றி, தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை தொடக்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் பேசிய ட்ரம்ப், இந்த விளக்கு இருளின் மீது ஒளியின் வெற்றி, அறியாமையின் மீது அறிவு மற்றும் தீமையின் மீது நன்மையின் வெற்றி என்பதைக் குறிக்கிறது. ” என்றார்.










