இஸ்மதுல் றஹுமான்
1 கோடி 69 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளை சட்ட விரோதமாக இலங்கைக்குள் கொண்டுவந்த மூவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் நேற்று 11ம் திகதி கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் ஆவர். இவர்கள் மூவரும் டுபாய் நாட்டிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவையின் ஈ.கே.- 648 இலக்க விமானத்தில் 22ம் திகதி அதிகாலை 3.50 மணிக்கு வந்திறங்கியுள்ளனர்.
அவர்கள் கொண்டுவந்த பயணம பொதிகளில் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட பிலெடினம் வகை சிகரட்டுகள் 113,000 அடங்கிய 565 கார்ட்டூன்கள் இருந்துள்ளன.
இதன் சந்தைப் பெறுமதி 01 கோடி 69 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.