பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து, உரிய நபர்களுக்கு வழங்குவதற்காக தேசிய அளவிலான குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
08.12.2025 இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர இதனை தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் உதவிகள் மற்றும் உபகரணங்கள் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சரியாகக் கிடைப்பதை இந்தக் குழு உறுதி செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் குழுவின் தலைவராக பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் குழு 08.12.2025 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.










