வெல்லம்பிட்டி – கித்தம்பவுவ பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
விடுதியொன்றில் தங்கியிருந்த தம்பதியரை இலக்கு வைத்தே இச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக இச் சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லையென தெரிய வந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய மூன்று சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ள நிலையில், அவர்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.