மீட்கப்பட்ட *மெக்சிகோ மற்றும் ஆர்ஜென்டீனா பெண்கள் உள்ளிட்டவர்கள் சமரவீரபுர பள்ளிவாசலில் தங்கவைப்பு
வெலிமடை, ரேந்தபொல பிரதேசத்தில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கரமான மண்சரிவில் ஒன்பது பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு ஏற்பட்டதும் இராணுவத்தினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று விரைவாக மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.
இந்த நடவடிக்கைகளின்போது, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மெக்சிகோ மற்றும் ஆர்ஜென்டீனாவின் பெண்கள் மூவர் உட்பட சுமார் 10 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்கள் அனைவரும் தற்போது சமரவீரபுர பள்ளிவாசலில் தற்காலிக தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது










