நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக நேற்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காட்டுத் தீ பரவியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பொலன்னறுவை, திம்புலாகல கந்த பகுதியில் நேற்று (07) பிற்பகல் ஏற்பட்ட காட்டுத் தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை உடவலவ பகுதியிலுள்ள வனப்பகுயில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீப்பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உடவலவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தளை, உக்குவெலவில் உள்ள ஒரு வனப்பகுதியிலும், இரத்தினபுரி, கொன்கஸ்தென்னவில் உள்ள ஒரு வனப்பகுதியிலும் தீப்பரவல் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.