முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைப்பாணி கிராமத்தில் தனியாக வசித்து வந்த பெண்ணொருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ராமசாமி ராமாயி எனும் 70 வயதான மூதாட்டியே நேற்று (22) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மூதாட்டி அவரது வீட்டில் சடலமாக கிடப்பதைக் கண்ட அயல்வாசிகள் மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதோடு, விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
மூதாட்டியிடமிருந்து நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடுவதற்காக இக் கொலைச் சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.