இஸ்மதுல் றஹுமான்
2024 பெப்ரவரி 24ம் திகதி இரவு முதல் 25ம் திகதி அதிகாலை வரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட பயணிகள் நெறிசலுக்கு காரணம் சிரி லங்கன் விமான நிறுவனத்தின் விமான கட்டுப்பாட்டு நடவடிக்கையில் தற்காலிகமாக ஏற்பட்ட தாமதமேயாகும் என விமான நிலைய மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவன தலைவர் பொறியியலாளர் அதுல கல்கெடிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது இந்த தாமதத்திற்கு ஊழியர் தொழிற்சங்க நடவடிக்கைகளோ வேறு எந்த நாசகார வேலைகளோ காரணமல்ல என நாம் திட்டவட்டமாக கூறுகிறோம்.
விமான நிலைய மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவன விமான நிலைய கட்டுப்பாட்டாளர்கள் என்று முறையில் ஏற்பட்ட தாமதத்திற்கு எமது கவலையைத் தெரிவித்துக்கொள்கிறோம். இதற்கு ஊழியர்கள் எந்த விதத்திலும் தொடர்பில்லையென்றும் விமான நிலைய விமான கட்டுப்பாட்டில் ஏற்பட்ட தற்காலிக தாமதமே ஏற்பட்ட இடையூறுக்கு காரணம் என்பதை தெளிவு படுத்துகிறோம்.
இனிமேல் இவ்வாறான தாமதங்கள் இடம்பெறாமல் இருப்பதற்காக விமான நிலைய கட்டுப்பாட்டாளர்கள் என்ற முறையில் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனமும் தேசிய விமான சேவைகள் என்ற அடிப்படையில் இலங்கை விமான சேவைகள் நிறுவனமும் ஒன்றிணைந்து உரிய சகல நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதை அறிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.