தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற பயிற்சிகளின் போது விபத்துக்குள்ளான விமானப்படை பரசூட் வீரர்கள் இருவரால் எதிர்வரும் இரு மாதங்களுக்கு பரசூட் பயிற்சிகளில் அல்லது பரசூட் சாகசங்களில் ஈடுபட முடியாதென விமானப்படை தளபதி எயார் மார்சல் உதெனி ராஜபக்ச தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான இராணுவ வீரர் தற்போது வரையில் இராணுவ வைத்தியாசலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
விபத்துக்குள்ளான விமானப்படை வீரர்கள் இருவரும் வைத்தியசாலைகளில் இருந்து வீடுகளுக்கு சென்றுள்ள போதிலும், அவர்களால் இரு மாதங்களுக்கு பரசூட் சாகசங்கிளில் ஈடுபட முடியாதென அவர்களுக்கு சிகிச்சை அளித்த வைத்தியர் அறிவித்துள்ளதாகவும் விமானப்படை தளபதி குறிப்பிட்டார்.
விமானப்படை தலைமையகத்தில் இன்று (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே இதனை குறிப்பிட்டார்.